தேசிய சதுரங்க ஆடவர் அணி பட்டத்தை பெட்ரோலிய நிறுவனங்கள் அணியும் மகளிர் அணிபட்டத்தை இந்திய விமான நிலைய ஆணைய அணியும் எதிர்பார்த்தபடி வென்றன. டை – பிரேக்கர் முறைமூலம் சாம்பியன் அணி தீர்மானிக்கப்பட்டது.இறுதிச்சுற்றில் கே.சசிகிரண், அருண்பிரசாத், அபிஜித் குன்டே, பி.அதிபன், தீப் சென்குப்தா ஆகிய கிராண்ட் மாஸ்டர்கள் அடங்கிய பெட்ரோலிய அணி, 3.5-0.5 என்ற புள்ளிகளில் மகாராஷ்டிரா ‘பி’ அணியைத் தோற்கடித்தது. பெட்ரோலிய அணியும் ரயில்வே ‘ஏ’ அணியும் தலா 16 புள்ளிகள் எடுத்தன. டை பிரேக்கர் முறைப்படி ஒன்பது சுற்றுகளில் இரு அணிகளும் ஆடிய ஆட்டங்களில் வென்ற அல்லது சமன் செய்த புள்ளிகள் கூட்டப்பட்டன. 28.5 ஆட்டப்புள்ளிகள் பெற்ற பெட்ரோலியம் அணி சாம்பியன் அணியாக அறிவிக்கப்பட்டது. 26.5புள்ளிகள் பெற்ற ரயில்வே ‘ஏ’ அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.மகளிர் பிரிவில் இந்திய விமான நிலைய ஆணையமும் ஏர் இந்தியாவும் 12 புள்ளிகள் எடுத்துச் சமனாக இருந்தன. டி.ஹரிகா, மேரி ஆன்கோம்ஸ், கிரண் மனீஷா மொகந்தி, நிம்மி ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய ஏஏஐ அணி, 24 ஆட்டப்புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 21.5 ஆட்டப்புள்ளிகள் எடுத்த ஏர் இந்தியா அணி இரண்டாம் இடத்தை அடைந்தது.

Leave A Reply

%d bloggers like this: