தஞ்சாவூர், மார்ச் 5-
தஞ்சாவூரில் ஜீவ அறக் கட்டளை சார்பில் அமைக் கப்பட்டுள்ள புற்றுநோய் மருத்துவமனையில் குரல் வளை அகற்றப்பட்டவர் களுக்கு பேசும் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள் ளது.தஞ்சாவூர் மாதாக் கோட்டையில் இம்மருத்து வமனை அமைந்துள்ளது.
தஞ்சாவூரைச் சுற்றியுள்ள திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம் பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலி ருந்து புற்று நோயால் பாதிக் கப்பட்டவர்கள், இங்கு வந்து சிகிச்சைப் பெறு கின்றனர்.இந்நிலையில் தற்போது இம்மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு, குரல் வளை அகற்றப் பட்டவர்களுக்கு பேசும் பயிற்சி மையம் தொடங் கப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சி, தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் காது, மூக்குத் தொண்டை சிறப்பு மருத்து வர் ஏ.ஜேசுதாஸ் தலை மையில் நடைபெற்றது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா பயிற்சி மையத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற் றினார். மருத்துவர் ஜி.செந் தில்குமார், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அருண் சேஷாசலம் உள்ளிட்ட மருத் துவர்கள் மற்றும் நோயாளி கள் கலந்து கொண் டனர்.மருத்துவர் ஏ.ஜேசுதாஸ் பேசும் போது, குறைந்த கட்டணத்தில் சேவை நோக் கோடு இம்மருத்துவமனை யில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இப்போது குரல் வளை அகற்றப்பட்டவர் களுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுவது துவக்கப் பட்டுள்ளது 8 மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாத மாகும் என்றார். இளைய தலைமுறையினர் பான் பராக், குட்கா, ஜரிதா, ஹான்ஸ் உபயோகிப்பதால் வாய்ப்புற்று ஏற்படுவதோடு ஆண்மை தன்மையையும் இழக்கின்றனர். இவற்றின் பாதிப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் வாயில் புகையிலை அடக்கும் பழக் கம் அதிகம் உள்ளதால் வாய்ப்புற்றால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என் றார். அரசும் இவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: