புதுச்சேரி, மார்ச் 5 –
புதுச்சேரி ராஜீவ் காந்தி நகர் குடியிருக்கும் மக்க ளுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என்று மார்க் சிட் கம்யூனிட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப் பம் காமராஜர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகரில் மூன்று ஏக்கர் நிலத்தில் 70 மணைகள் பிரிக்கப்பட்டு பத்திரங்க ளோடு விற்பனை செய்யப் பட்டது. மனைகளை வாங் கிய குடும்பங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து அவ் விடத்தில் கல்வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருவடிக் குப்பத்தில் உள்ள கருமுத்து மாரியம்மன் அரங்காவலர் குழுவினர் ராஜீவ்காந்தி நக ரில் குடியிருப்பவர்களிடம் இவ்விடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி குடியிருப்பவர்களிடம் தலா ரூ. 6 லட்சம் கேட்டுள்ளனர். இதற்கு அப்பகுயில் குடியி ருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இம்மாதம் 5 ஆம்தேதி ஐம் பதுக்கும் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி நகரில் உள்ள காலி மனைகளில் உள்ள காம்பவுன்டு சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
மேலும் குடியி ருக்கும் மக்களிடம் வீடு களை காலி செய்ய வேண் டும் என்று மிரட்டி சென் றுள்ளனர்.பாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தி நகர் குடியிருக்கும் மக்கள் தங்களது குடும்பத் தோடு திங்களன்று (மார்ச்-5) சாரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை சிபிஎம் தலைமை யில் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் குடியிருக்கும் மக்களிடம் மாவட்ட துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.இச்சந்திப்பில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன், ராஜாங்கம், உழவர்கரை நகர செயலா ளர் எ.லெனின்துரை, நகரக குழு செயலாளர் பிரபுராஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியலிங்கம்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
அப்போது, பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். சுவர்களை இடித்த சமூக விரோதிகள் மற்றும் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். கருமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாவட்ட துணை ஆட்சியரிடம் தலை வர்கள் வலியுறுத்தினர்.இன்னும் ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக துணை ஆட்சியர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து இப் போராட்டம் கைவிடப்பட் டது.

Leave a Reply

You must be logged in to post a comment.