பெய்ஜிங், மார்ச் 5 –
நேரடியாக மக்களைப் பாதிக்கும் கடுமையான பிரச்சனைகளைத் தீர்க்க அரசு தலைமைப் பங் கேற்று செயலாற்ற வேண் டும் என்று சீனாவின் ஜனா திபதி ஹூ ஜிண்டாவோ வலியுறுத்தியுள்ளார்.சீனாவின் நாடாளு மன்றக்கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு திட்டங்கள், பிரச் சனைகள், சாதனைகள் பற்றி இக்கூட்டத்தில் விவா திக்கிறார்கள்.
இதில் பங்கேற்று உரை யாற்றியபோதுதான் ஹூ ஜிண்டாவோ இவ்வாறு தெரிவித்தார். உலகம் முழுவதும் முத லாளித்துவ நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையிலும், அரசின் பாத்திரத்தை நீர்த் துப் போகச் செய்யும் வேலையில்தான் பல நாடு கள் செயல்படுகின்றன. நெருக்கடிக்குக் காரண மான முதலாளித்துவத்தை மேலும் தீவிரமாக நடை முறைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண் டுள்ளன.
இந்நிலையில்தான் நெருக்கடியால் பாதிக்கப் படாத சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து முக் கியமானதாக அமைந் துள்ளது. நாடாளுமன்றக் கூட் டத்தில் பேசிய அவர், மருத் துவ மற்றும் சுகாதாரக் கட் டமைப்பை வளர்த்தெடுப் பதன் மூலமாக மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத் தவும், அதை மேம்படுத்த வும் முடியும். இந்தப் பணி யை மேலும் அபாரமான வகையில் செய்ய வேண்டும். மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், அவர் களைக் கடுமையாகப் பாதிக் கும் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு தலைமைப் பங்காற்ற வேண்டும். மறுபுறத்தில், நலிவடைந்த பிரிவினருக்கு உதவி செய்யும் பாரம் பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒட்டுமொத்த சமூ கத்திற்கும் வழிகாட்ட வேண்டும்.
அதன்மூலம் மேம்பட்ட வாழ்விற்கு பங் களிக்க முடியும். மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பில் மேலும் பல சீர்திருத்தங் களை மேற்கொள்ள வேண் டும் என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து நடை பெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பல்வேறு பிரச் சனைகள் பற்றி விவாதிக்கப் படுகிறது. ஈரான் மற்றும் சிரியா மீதான மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரங்கள் பற்றியும் விவாதம் நடக்க வுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.