பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் பத்திரி கையாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களில் சிலரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள வழக்கறிஞர் கள் நீதிமன்றத்தை புறக்கனிக்கப் போவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன.கனிம கொள்ளையில் பல்லாயிரங்கோடி களை விழுங்கிய ஜனார்த்தன ரெட்டி, பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராக வருகிறார்.
இதனை வழக்கம் போல் பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க முயல்கின்றனர். உடனே பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்களும், பாஜக குண்டர் களும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குகின்றனர். இதனை தடுத்திட வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர். இதில் காவல்துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் படு காயமடைகின்றனர். இந்த சம்பவத்தை பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெட்டே உள்ளிட்ட பலரும் கண் டித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறி ஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அதன் பின்னரே சில வழக்கறி ஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதே பெங்களூர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகினற்ன. அப்படி நடைபெறும் வழக்குகள் குறித்த விபரம், குற்றச் சாட்டில் ஈடுபட்டவர்களது புகைப்படங்களை பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த பிரச் சனையும் இல்லை. ஏன் சில வழக்குகளில் வழக்கறிஞர்களே பத்திரிகையாளர்கள் முன் நின்று வழக்கு குறித்த விபரங்களை விளக்கு வதில்லையா? வழக்கில் சிக்கியுள்ளவர்களை புகைப்படம் எடுக்க சொல்வதில்லையா? அப்படியிருக்கையில், பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியை படம் எடுக்கும் போது மட்டும் ஏன் வழக்கறிஞர்கள் அதனை தடுக்க வேண்டும். இங்குதான் காவி கும்பலின் சதிவேலை இருக் கிறது.
நீதிக்கு எதிராக அநீதிக்கு ஆதரவாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, வழக் கறிஞர் என்ற பெயரில் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது. இதனை சக வழக்கறிஞர்கள் அனுமதிக்க கூடாது.நீதிபதிகள் உள்ளிட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிக்கு முன்பு சமம்தானே! ஊழல் பேர்வழி ஜனார்த்தன ரெட்டிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும். நீதிக்கு மாறாக அநீதிக்கு ஆதரவாக சில வழக்கறிஞர் கள் களம் இறங்குவது நியாயமா என சிந்திக்க வேண்டும். பாஜக மீது படிந்துள்ள ஊழல் கறையை மறைப்பதற்கு காவிகும்பல் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் தனது சுய நலத்திற்காக பாஜக ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதி துறைக்கும், நான்காவது தூணான பத்திரிக்கை துறைக்கும் மோதலை உருவாக்க முயல்கிறது. இதனை வழக்கறிஞர் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அநீதிக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபட்ட பாஜக வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும். அதுதான் நேர்மையான நடவடிக்கையாக இருக்க முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.