புதுதில்லி, மார்ச் 5 –
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த படு கொலையில் 200 பேர் பாதிக் கப்பட்டனர். இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும், இன் னும் நீதிக் கிடைக்கவில்லை என இடைநீக்கம் செய்யப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் குமுறினார். இந்த ஆண்டுகளில் குஜராத் தொடர்பாக அச்சம் மற் றும் அனுபவம் குறித்து பல பேச்சாளர்கள் பேசிவிட்ட னர்.
ஒரு குடும்பத்தில் இறப்பு அல்லது ஏதேனும் துயரம் ஏற்பட்டால், அந்த தாக்குதலுக்கு தீர்வு என்பது இருக்காது. குஜராத் கொடூர படுகொலைகள் குறிப் பிட்ட பாதிப்பு, தாக்கு தலைக் காட்டிலும் மிக மோசமானது. குறிப்பிட்ட அரசியல் இத்தகைய பயங் கர நிலையில், தொடர்பு கொண்டுள்ளதாக உள்ளது. இந்த அரசியல் தேசத்தை மெல்ல, கைப்பற்ற வரு கிறது என மார்க்சிஸ்ட்டு அர சியல் தலைமைக் குழு உறுப் பினர் பிருந்தா காரத் கூறி னார்.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா நிகழ்வுக்குப் பின் னர் 2002ம் ஆண்டில் அப் பாவி மக்களை சில மத வெறியர்கள் கொன்றனர். அவர்களது வீடுகளுக்கு தீ வைத்து எரித்து, சேதப்படுத் தினர். இந்த மதவெறியர்கள் நடவடிக்கையை பாஜக வின் மோடி தலைமை யிலான குஜராத் அரசு, நட வடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது.இதுதொடர்பாக மோடிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் வாக்குமூலம் தந்தார். மோடி பொறுப்பேற்ற பிறகு குஜராத் மாநிலம் தொழில்துறையில் வளர்ச்சி பெற்று வருவதாக பேசி வருகிறார்கள். ஹிட்டர் கட் டுப்பாட்டில் இருக்கும் போது, ஜெர்மனி தொழில் துறை வளர்ச்சியில் மேம் பட்டிருந்தது. தற்போது ஹிட்லரின் ஆட்சியில் நடந்த மேம்பாடு குறித்து தற் போது பேசவில்லை. நாஜிப் படையின் கொடூரத்தையே பேச வேண்டியுள்ளது. ராவ ணனின் இலங்கை, தங்கத் தால் உருவாக்கப்பட்டது.
ராவணனைப் பற்றி பேசும் போது, அவனது ஆட்சி யில் தங்கமயமாக திகழ்ந் ததை யாரும்பேசவில்லை என ஹிட்லர், ராவணன் ஆகிய அக்கிரமக் காரர் களை ஐபிஎஸ் அதிகாரி சஞ்சிவ் பட், கோத்ரா வன் முறை தொடர்பான தொகுப்பு புத்தகம், ‘லெஸ்ட் வி பர்செட்’ என்ற புத்தகத் தொகுப்பின் போது தெரி வித்தார்.குஜராத் வன்முறை நிகழ்வு நடந்து 10 ஆண்டுகள் ஆவதையொட்டி நடந்த, நிகழ்ச்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. குஜராத் மாநில மக்கள் பெரும் மௌனச் சுவரை எழுப்பி, வாய்திறக்காமல் உள்ளனர்.
விபரீத விளைவு களால் அவர்கள் காயம் பட்டு உள்ளனர் என்றும் சஞ்சீவ்பட் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பேசிய படத் தயாரிப்பாளர் மகேஷ் பட், மாதவன்முறையை நிறுத்துவதற்கு ஆர்வம் காட்டாதவர்களாக மக்கள் இருக்கக்கூடாது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: