மாஸ்கோ, மார்ச் 5
-ரஷ்ய ஜனாதிபதித் தேர் தல் நேர்மையற்ற, நாணய மற்ற முறையில் நடந்துள் ளது என்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளரான கென் னடி சுகானோவ் குற்றம் சாட்டியுள்ளார்.95 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 64 சதவிகித வாக்குகளை தற் போதைய பிரதமரும், ஜனா திபதி தேர்தல் வேட்பாள ருமான விளாதிமீர் புடின் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ ருக்கு அடுத்தபடியாக கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட் பாளர் கென்னடி சுகா வோன் 17.14 சதவிகித வாக்கு களும், சுயேட்சையாக போட்டியிட்ட மிக்கைல் புரோகோவ் 7.42 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர்.இதுதான் ரஷ்ய வர லாற்றிலேயே நடந்த மிகவும் நேர்மையான தேர்தல் என்று புடினின் தேர்தல் மேலாளர் ஸ்டானிஸ்லேவ் கோவோருகின் கூறியுள் ளார். ஆனால், மக்கள் மத்தி யிலிருந்தே ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
மாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் 90 சதவிகித வாக்கு கள் புடினுக்கு ஆதரவாக விழுந்துள்ளன. எங்கள் வாக்குகளைத் திருடிவிட் டனர் என்கிறார் நோயாளி களில் ஒருவரான வேலன் டின் கோர்சுன். கிட்டத்தட்ட இதுதான் அனைத்து இடங்களிலும் நடைபெற்றிருக்க வேண் டும். பெரும் அளவில் பொய்யான வாக்குகளை ஆளுங்கட்சியினர் தயாரித் துள்ளனர். “பேரரசர்” புடின்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்கிறார் கோர்சுன். அவரைப் போலவே மருத்துவமனை யில் உள்ள மற்றவர்களும் தங்கள் வாக்குகள் பறிக்கப் பட்டன என்று பெரும் கோபத்துடன் இருக்கிறார் கள். 6 மற்றும் 3 சதவிகித வாக்குகளை முறையே பெற் றுள்ள ஜிரினோவ்ஸ்கி மற் றும் மிரினோவ் ஆகிய இரு வரும் புடினுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரையில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக இவர்கள் குற்றம் சாட்டினர். புடினுக்கு எதிராகக் களத் தில் நின்ற அனைத்து வேட் பாளர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந் தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, இவர் களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் முடிவை எதிர்த்து மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் போராடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் போராட்டங் கள் விரைவில் மாஸ்கோ உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: