நாகப்பட்டினம், மார்ச் 5-
நாகை மாவட்ட மைய நூலகத்தில், நூலக வாசகர் வட்டம் சார்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு மாவட்ட மைய நூலகர் சு.பட்டுக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத்தலைவர் ஆ.மீ.ஜவகர்முன்னிலை வகித்தார்.
கவிஞர் ஆவராணி ஆனந்தன் வரவேற்றார்.வீரன் வயல உதயகுமாரால் தொகுக்கப்பட்ட “தமிழ்க்கூடல்” என்னும் 50 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலைத் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாவட் டத் துணைத் தலைவர்எல்.பி.சாமி வெளியிட்டார். நாகப்பட்டி னம் தமிழ்ச்சங்கத் தலைவர் ம.கா.ரகு பெற்றுக்கொண்டார்.கவிஞர் வெற்றிப்பேரொளி எழுதிய “சொல்பருக்கைகள்” என் னும் கவிதை நூலை, தமுஎகச மாவட்டத் தலைவர் ந.காவியன் ஆய்வு செய்து உரையாற்றினார். கோ.முருகேஸ்வரி மோகன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: