தஞ்சாவூர், மார்ச் 5-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சா வூர் ஒன்றியக்குழுக் கூட்டம் கே.மருதமுத்து தலைமை யில் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு சிறப் புரையாற்றினார். தீர்மானங் களை முன்மொழிந்து செய லாளர் வி.கருப்பையா உரை யாற்றினார். ஆவான், ஆர்.எஸ்.வேலுச்சாமி உள் ளிட்ட ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண் டனர்.கோடை துவங்கி விட் டதால் நீர்நிலைகளை பாது காக்க பொதுப்பணித்துறை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப் பட்டுள்ள தஞ்சை- பட் டுக்கோட்டை, பேராவூ ரணி அகல ரயில் பாதை திட் டத்தை துவங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து வரும் மின்வெட்டை மாநில அரசு தடுத்து, சீரான மின் விநியோகம் செய்திட வேண் டும் என்று மாவட்ட நிர்வா கத்திற்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் இக்கோரிக்கை கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட் டால், திருச்சிற்றம்பலத்தில் சாலைமறியல் செய்வதென் றும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

Leave A Reply