சூரத், மார்ச் 5 –
சொராபுதின் என் கவுண்ட்டர் வழக்கில் முக் கிய சாட்சிகளான இரு வரை நில மோசடி ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குஜராத் காவல்துறை கைது செய் துள்ளது. தசரத், ராமன் படேல் மற்றும் அவர்களது உற வினர் பங்கஜ் படேல் ஆகி யோரை சூரத் குற்றப் பிரிவு நிபுணர்கள் பிடித்து, விசா ரணைக்கு கொண்டு சென் றனர்.
காவல்துறை தகவல்படி போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த 3 பேரும் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலங்களை வாங்கி இருப்ப தாக கூறப்பட்டுள்ளது.தசரத்தும் ராமன்படே லும் அகமதாபாத்தை மைய மாகக் கொண்ட பாப்புலர் பில்டர்ஸ் கட்டுமான நிறு வனத்தின் உரிமையாளர்கள் ஆவர். குஜராத்தின் முன் னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம் சாட் டப்பட்டுள்ள சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் இவர்கள் இரு வரும் முக்கிய சாட்சியாகும்.காலை நடைப் பயிற் சிக்கு ராமன் படேல் சென்ற போது, அவரை காவலர்கள் பிடித்தனர்.
தசரத், பங்கஜ் ஜும் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, காவல்துறை பிடித் துச் சென்றது. பங்கஜ் படே லும் இதர 22 நபர்களும் உன்ரோகித் சகாகரி கர். பஞ்த்னாரி மண்டலி என்ற கூட்டுறவு அமைப்பை உரு வாக்கினர். இதற்காக பங்கஜ் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சூரத் மாவட்டத் தில் சச்சின் மற்றும் வேசு இடையே வாங்கினார்.
நிலத்திற்கு உரிமை கொண்டாட பங்கஜ் படேல் முறைகேடாக போலி பவர் பத்திரங்களை விவசாயி களுக்காக தயாரித்தார். விவசாயிகளுக்கு தங்கள் நிலம் தொடர்பாக முறை யான ஆவண விவரங்கள் இல்லை. இதனை பயன்படுத்தி ரூ.100 கோடி நிலத்தை பங்கஜ் கையகப்படுத்தினார் என காவல்துறையினர் தெரி வித்தனர். இந்த ஒட்டுமொத்த ஊழலும் 1998 – 2008ம் ஆண்டுகள் காலகட்டத் தில் நடந்தது.

Leave A Reply