வேலூர், மார்.5-
ஜவ்வாது மலை கிரா மங்களில் யானைகள் அட்ட காசத்தால் 700 வாழை, நெற் பயிர்கள் நாசமாயின. பாதிக் கப்பட்ட பகுதிகளை விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர்.கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலை கிராமங் களான அமிர்தி, பலாம் பட்டு, செண்டத்தூர், நீர் பளாம்பட்டு உள்பட பல் வேறு கிராமங்களில் யானை கள் கூட்டம் அட்டகாசம் செய்தது. இதில் விவசாயி களின் பயிர்கள் நாசமாயின. இதுவரை 4 விவசாயிகள் பலியாகியுள்ளனர். இத னால் வனகிராம மக்கள் அச் சத்தில் வாழ்ந்து வருகின்றன.யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்கு விரட் டும் பணியில் வனச் சரகத் தினைச் சேர்ந்தவர்கள் 3 ஆயிரம் வாணவெடிகள், அணுகுண்டு, பட்டாசுகள் யானைகளை விரட்ட பயன் படும் மிளகு வெடிகளோடு தயார்நிலையில் உள்ளனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் நாகநதியை அடுத்துள்ள தெள்ளை கிராமத்துக்குள் யானைகள் புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த கணேசன், சிவாஜி, செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான 700 வாழை மரங்களையும், நெற்பயிர் களையும் நாசம் செய்தன. சேதமடைந்த வாழை மற்றும் பயிர்களை விவசாயி கள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ். தயாநிதி, மாவட்டச் செயலாளர், பி. சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் சி.எஸ். மகாலிங் கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர். சேத மடைந்த விவசாயப் பயிர் கள் குறித்து அரசுக்கு உரிய அறிக்கை அனுப்பி, விவ சாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். காட்டு யானைகளிடமிருந்து பாது காப்பு அளிக்கும் பணியி லும் வனத்துறையினர் ஈடு பட வேண்டும் என கோரிக் கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: