அம்பத்தூர், மார்ச், 5 –
ஆவடி அருகேயுள்ள நசரேத் கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் கல்லூரி நாள் விழா கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சி கவுன்சில் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், கல் லூரி நிறுவனர் சந்திரா டேவிட் ஆகியோர் 2011 – 2012ம் ஆண்டில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ மாண விகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரி ஆலோசகர் ஹெச்.ஜி.எஸ்.அருளாண்ட்ரம், முதல்வர் லில்லி ஸ்டூவர்ட் ஆகியோர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். கல்லூரி செயலாளர் ஏ.என். ஹென்றி மாரீஸ் கல்லூரி யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு நேர்காணலில் கலந்து கொண்டு, வேலை கிடைத்த 109 மாணவ மாண விகளுக்கு வேலை நியமனத் திற்கான கடிதத்தை வழங்கி னார்.முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.பி.திருத்துவ தாஸ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவ ரையும் கவர்ந்தது.

Leave A Reply

%d bloggers like this: