திருப்பூர், மார்ச். 5-நாளொன்றுக்கு 10 மணி நேரம் வரை நீடிக்கும் மின் வெட்டு காரணமாக தொடர்ந்து இயக்க முடியாத இக்கட்டான நிலையில் கிரில் தொழில் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே மின் விடுமுறையில் இருந்து இந்த தொழிலுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், கிரில் ஒர்க்சாப் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.இது குறித்து கிரில் ஒர்ஷாப் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.ராமசாமி, செயலாளர் எம்.ஆர்.வடிவேல் ஆகியோர் தலைமையில் திருப்பூர் கிரில் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை தந்தனர்.கிரில் தொழிலைப் பொறுத்தவரை மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டரை வைத்து இயக்க முடியாத தொழிலாகும்.
இந்நிலையில் நாளொன்றுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணி செய்ய வேண்டிய நிலையில் பல மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்படுவது இத் தொழிலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே கிரில் தொழிலுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதைக் கொண்டு கிரில் தொழிலை இழப்பில்லாமல் இயக்கிவிட முடியாது.
மேலும் மாலை நேரங்களில் மின்சாரம் வரும்போது வேலை செய்வதாக இருந்தாலும் சுற்று வட்டார பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக இரவு நேரங்களில் இத்தொழிலைச் செய்யமுடிவதில்லை.எனவே மின் விடுமுறையில் இருந்து இத்தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் மாலை நேர மின்தடை இல்லாத சமயங்களில் தொழிற்சாலைகளை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலை நம்பி பிழைக்கும் ஏராளமான கிரில் தொழில் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக விசாரிப்பதாக ஆட்சியர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: