தூத்துக்குடி, மார்ச் 5-
தூத்துக்குடி மாநகராட் சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். மதுமதி, தூத்துக்குடி ஆணை யர் பொறுப்பேற்கும் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.தூத்துக்குடி நகராட்சி 2008ம் ஆண்டு மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட் டது. அப்போது நகராட்சி ஆணையராக இருந்த லட் சுமி மாநகராட்சி ஆணைய ராகவும் தொடர்ந்தார்.
அதன்பின் மாவட்ட வரு வாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆணையராக பொறுப் பேற்றதும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். குடிநீர் பிரச்சனை, சாலைவசதி, கழிவுநீர் கால் வாய் உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திக் கொடுத் தார். மேலும், நீண்ட நாட் களாக நிலுவையில் இருந்த சொத்துவரி, குடிநீர் வரியை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து, மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கினார்.
மேலும், ஊழியர்களுககு மாதம்தோறும் முதல்தேதி சம்பளம் கிடைக்க வழி செய்தார். தற்போது, தமிழக அரசு இவரை காத்திருப் போர் பட்டியலில் வைத் துள்ளது.இதனையடுத்து மாநக ராட்சியின் புதிய ஆணைய ராக பெண் ஐஏஎஸ் அதி காரி எஸ்.மதுமதி என்ப வரை தமிழக அரசு நியம னம் செய்துள்ளது. தமிழகத் தில் உள்ள 10 மாநகராட்சி களில் சென்னையில் மட் டுமே ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமனம் செய்யப்பட்டனர். இதர மாநகராட்சிகளில் பதவி உயர்வு மூலம் வரும் அதி காரிகளே ஆணையராக நிய மிக்கப்பட்டு வந்தனர்.சென்னையை அடுத்து தூத்துக்குடி மாநகராட் சிக்குதான் முதல் முதலாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கன்னி யாகுமரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி யவர்.
அப்போது அங்கு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பெயர் பெற்றார். அதன்பின் சென்னை மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டு, 24 மணி நேரத் தில் காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டார்.கடந்த 37 நாட்கள் காத் திருப்போர் பட்டியலில் இருந்த அவர், தற்போது தூத் துக்குடி மாநகராட்சி ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. இவர் மார்ச் 7ந்தேதி பொறுப் பேற்பார் எனத் தெரிகிறது.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் பல அதி ரடி மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே எதிர் பார்ப்பு நிலவுகிறது.மாநகராட்சி ஆணையர் மாற்றம் ஏன்?ஏற்கனவே, மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாநகராட்சி நிலைக்குழுத் தேர்தலின் போது அதிமுக கவுன்சிலர் கள் 8பேருக்கு ஓட்டுப் போட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வினர் தமிழக கவர்னருக்கு மனு அனுப்பியதாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருந்ததும் இவரது மாற்றத்துக்கு முக்கிய கார ணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.