தூத்துக்குடி, மார்ச் 5-தென்காசி வழியாக கேர ளாவுக்கு கடத்தப்பட இருந்த 6 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் வெள்ளியன்று பிடிபட்டன. இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின் றனர்.இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு விஜயேந்திர பிதரி உத்தரவுப்படி கள்ளநோட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் வெள்ளி யன்று நள்ளிரவு தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் கத்தை கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. மொத்தம் 597 நோட்டுகள் இருந்தன.அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதை கண்டுபிடித்தனர். அதனை கொண்டு வந்தவர் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 46) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்து, கள்ள ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.இதுபற்றி நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந் திர பிதரி கூறியதாவது: கைது செய்யப்பட்டு உள்ள ராஜேந்திரன், கள்ள நோட்டு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்; இவர் ஏற்கனவே கள்ள நோட்டு வழக்குகளில் சிக்கி உள்ளார். பிரபல கள்ளநோட்டு தயாரிப்பாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.ராஜேந்திரன் மீது இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசில் போதை பொருள் கடத்திய வழக்கும், 5 மாதங்களுக்கு முன்பு வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் குருமூர்த்தி மீது கள்ளநோட்டு வழக்கும் போடப்பட்டுள்ளது.ராஜேந்திரன் தென்காசி வழியாக கேரளாவுக்கு இந்த கள்ள நோட்டுகளை கடத்திச் செல்ல முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நோட்டுகள் ஈரோட்டில் தயாரிக்கப் பட்டு தென்காசிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கள்ள நோட்டுகளை பெட்ரோல் பங்க், ஓட்டல்கள், நில விற்பனை தொழிலில் பயன் படுத்தி புழக்கத்தில் விடு கின்றனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பயன் படுத்த கொண்டுவரப்பட் டதா? என்று தெரியவில்லை.நெல்லை மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டு புழக் கத்தை தடுக்க தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை மொத்தம் 43 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிக்கப்பட்டு உள்ளன. கள்ளநோட்டு கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக் குடி மற்றும் ஈரோடு மாவட் டங்களுக்கு சென்று உள்ளனர். இவ்வாறு நெல்லை மாவட்ட எஸ்பி விஜயேந் திர பிதரி கூறினார்.மேலும், தற்போது சிக்கி யுள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
அதாவது ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள், வாட்டர் மார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கள்ளநோட்டுகளில் இருக்கின்றன. அதாவது இதுவரை பிடிபட்ட நோட்டுக்களை விட, தற்போது பிடிபட்ட கள்ள நோட்டுகள் கூடுதல் தரமானதாக உள்ளது. இத னால் அவற்றை கள்ள நோட்டுதான் என்று கண்டு பிடிப்பதில் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் 2 சிறப்பு அம்சங்கள் அதில் இல்லாததை வைத்துதான் அவை கள்ள நோட்டுகள் என்பதை உறுதி செய்தோம் என்று எஸ்பி விஜயேந்திர பிதரி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.