புதுதில்லி, மார்ச் 5 –
தலைநகர் தில்லி மற்றும் அதன் செயற்கைக் கோள் நகரப் பகுதியிலும், ஹரியா னாவின் பகதுர்கா பகுதி யிலும் திங்கட்கிழமை 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக் கத்தால் வீடுகளில் இருந் தும், அலுவலகங்களில் இருந்தும் மக்கள் வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்க மையப் பகுதியான, ஹரியானா பகதுர்காவில் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.
தில்லி அருகாமையில் உள்ள செயற்கைக் கோள் நகரம் காஜியாபாத் நொய்டா (உ.பி.) பகுதிகளில் மதியம் 1.11 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடி யில் 9.கி.மீ. ஆழத்தில் ஏற் பட்ட இந்த நில அதிர்வு, 10 வினாடிகளுக்கும் குறை வான நேரமே நீடித்தது.நிலநடுக்கத்தால் ஏற் பட்ட உயிரிழப்புக் குறித்து, உடனடித் தகவல்கள் ஏதும் வரவில்லை என தீயணைப் புத் துறையினரும், காவல் துறையினரும் தெரிவித் தனர்.
இதுகுறித்து இந்திய புவியியல் ஆய்வு (ஜிஎஸ்ஐ) துறையினர் தரப்பு தகவல் படி நாட்டில், 30 நகரங் களில் 4வது மண்டலப் பகு தியில் வருகின்றன. இந்தப் பகுதி தீவிர நில அதிர்வு மண்டலமாக உள்ளது.கடந்த ஆண்டு செப்டம் பர் மாதம் முதல், தலைநகர் தில்லியில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இதுவாகும். நில நடுக்கம் ஏற்படக்கூடிய 30 நகரங்களில் ஒன்றாக தில்லி யும் உள்ளது.2011ம் ஆண்டு செப்டம் பர் மாதம் 18ம்தேதி தில்லி யில் நில அதிர்வு ஏற்பட் டது. சிக்கிம் – நேபாள எல் லையில் 6.8 ரிக்டர் நிலநடுக் கம் ஏற்பட்ட போது, இந்த நில அதிர்வு தில்லியில் ஏற் பட்டது. ஹரியானா மாநி லம் குர்கான், ரோதக், ஜகஜ் ஜர், ஹிசார், பிவானி மற் றும் இதர இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது.
நில நடுக்கத்தை பஞ்சாப் மற் றும் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா ஆகிய பகுதிகளிலும் காண முடிந்தது.மதியம் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து, மாலைவரை அலுவலகம், வீடுகளுக்கும் மக்கள் பயந்த வாறே வெளியில் நின்றனர். பல மணி நேரம் கழித்து மீண்டும் நில நடுக்க அபா யம் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள், நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Leave A Reply