திருவாரூர், மார்ச் 5-
நெல் கொள்முதல் குள றுபடிகளை களைய வேண் டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசனை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள் கோரிக்கை வைத் தனர்.கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனி வேல் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திருவாரூர் மாவட்டம் முழு வதும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் தேக்கம் ஏற்படு வதால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கிக்கிடப் பதை எடுத்துக்கூறி உடனடி யாக நெல் கொள்முதல் செய்திட தேவையான வசதி களை செய்து தந்து விவ சாயிகளை பாதுகாக்க வேண் டும் என தெரிவித்தனர்.
வியாபாரிகளிடமிருந்து நெல்லைப்பெறும் கொள் முதல் நிலையங்கள் மீது நட வடிக்கை எடுப்பதில் ஆட் சேபணை இல்லை என்ற போதிலும் இதனை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உண்மையான விவசாயிகளி டமும் நெல் கொள்முதல் செய் யப்படாத நிலை உள்ளது.எனவே, இந்த அவல நிலை போக்கப்படவேண் டும். நாளொன்றுக்கு குறைந் தபட்சம் 3 லட்சம் ரூபாய் கொள்முதலுக்காக வழங்கு வதோடு போதுமான அள விற்கு சாக்கு உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கிட வேண்டும் என வும் எடுத்துக்கூறப்பட்டது.மேலும் மிக மோசமாக பழுதடைந்துள்ள திருவா ரூர்-தஞ்சை தேசிய நெடுஞ் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்ப னிட வேண்டும் என்று கேட் டுக்கொள்வதோடு சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது, பேருந்து விபத்தில் மரணமடைந்த கொர டாச்சேரி கிளரியத்தை சேர்ந்த மாணவன் விஜய் குடும்பத்திற்கு அரசு அறி வித்த 2 லட்சம் ரூபாய் நிவா ரண நிதியை உடனடியாக பெற்றுத்தரவேண்டும் என் றும் கோரிக்கை வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்களின் கோரிக்கையை பரிவுடன் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த கோரிக்கைகளின் மீது உட னடி நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தார்.மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் பிரச்ச னையாகி வருகிற நேரத்தில் விவசாயிகளிடம் கருத்த றிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டிய தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலா ளரின் அணுகுமுறை விவ சாயிகளுக்கு விரோதமாக அமைந்துள்ளதாகவும் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
————————
கொள்முதல் தேக்கத்தை கண்டித்து நாளை சிபிஎம் சாலைமறியல்
நன்னிலம் வட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள் முதல் நிலையங்களிலும் முறையான கொள்முதல் நடை பெறாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டை கள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. எனவே, நெல் கொள்முதலை துரிதப்படுத்தக்கோரியும் அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் கொள்முதலுக் காக தினசரி தலா 3 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, மற்ற வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி வரும் புதன்கிழமையன்று (மார்ச் 7) காலை 10 மணி அளவில் பேரளம் கடைவீதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.வீர பாண்டியன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.நடராஜன், எஸ்.காளி முத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சம்மந்தம், ஏ. கலைவாணன் உட்பட திரளானோர் பங்கேற்கின்றனர்.
————————

Leave a Reply

You must be logged in to post a comment.