திருச்சிராப்பள்ளி, மார்ச் 5-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 20-வது மாநாட்டு தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மா னக் கூட்டம் திருச்சி அய்கப் அரங்கில் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலை மை வகித்தார்.
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கட்சியில் உள்ள ஒரு வரோ, சங்கத்தை சார்ந்தவரோ எவ்வளவுதான் உண்மையாக உழைத்தாலும் தத்துவம் புரிந் தால்தான் வெற்றி பெற முடியும். தத்துவம் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் வள ரக்கூடியது. அரசியலை பற்றி லெனின் கூறும்போது, ஒரு முகப்படுத்தப்பட்ட பொருளா தாரம்தான் அரசியல் என்றார். யுத்தத்தை பற்றி குறிப்பிடும் போது, மக்கள் அரசியலுடன் மோதி வெடிப்பதுதான் யுத்தம் என்றார். முதலாளித்துவ அரசியலை எதிர்த்து போராடும்போது அதற் குரிய தத்துவ ஞானத்துடன் போராடவேண்டும்.
மார்க்சிய தத்துவத்துக்கு ஒரு குணம் உண்டு தத்துவத்தை சரியாக புரிந்துகொண்டு நடைமுறை அரசியலுக்கு பொருத்தி பார்ப் பதுதான் மார்க்சிய தத்துவம் ஆகும். மக்களுக்கு தலைமை தாங்கி அவர்களுடைய பிரச் சனைகளுக்காக அவர்களை போராட வைப்பதுதான் நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.