காஞ்சிபுரம், மார்ச் 5 -சிறு, குறு விவசாயிக ளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங் கப்பட உள்ளதாக காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் ஹனிஸ் சாப்ரா தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-சிறு, குறு விவசாயிக ளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 விழுக் காடு மானியமாக ஏக்கருக்கு 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற் காக விண்ணப்பிக்க விரும் பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நிலவரைப் படம், குத்தகை நிலமாக இருந்தால் 10 ஆண்டுக்கான ஒப்பந்தபத்திரம் போன்ற ஆவணங்களோடு வட்டார வேளாண்மை, உதவி இயக்கு நர்கள், தோட்டக் கலை உதவி இயக்குநர்கள் அலு வலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தின் மூலம் பாசன வசதி மற்றும் மோட் டார் உள்ள சிறு, குறு விவ சாயிகள் 100 விழுக்காடு மானியம் பெறலாம். சிறு, குறு விவசாயிகள் அல்லாத பிற விவசாயிகள் 75 விழுக் காடு மானியம் பெறலாம். ஒதுக்கப்பட்ட நிதியிலி ருந்து 80 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 விழுக்காடு பிற விவசாயி களுக்கும் பகிர்ந்தளிக்கப்படு கிறது. எனவே 100 விழுக் காடு மானியத்தை பெற்று காஞ்சிபுரம் மாவட்ட விவ சாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண் டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: