சிரியாவின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ப்ஷர் அல் அஸ்ஸாத் மற்றும் அவரது அரசுக்கு வெனிசுலா மக்களின் ஆதரவு முழுமையாக உள்ளது என்று வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார். சிரியாவின் இறையாண்மையை மதிக்காமலும், அந்நாட்டு அரசை நிர்ப்பந்தம் செய்யும் வகையிலும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் நடந்து கொள்கின்றன. சிரியா மீது தொடுக்கப்படும் அனைத்து வகையான தாக்குதல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம் என்று தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
* * *
எந்தவிதக் காரணமும் இல்லாமல் அப்பாவி ஒருவரை பிரிட்டன் காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் முன்கூட்டியே இது திட்டமிட்டு நடத்தப்பட் டுள்ளது. மான்செஸ்டர் காவல்துறையினர்தான் இந்த கொலையைச் செய்தனர் என்று செய்திகள் வெளியாகியிருக் கின்றன. மார்ச் 3 அன்று செஷயர் என்ற இடத்தில் முன் கூட்டியே காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, காரிலிருந்து இறங்கிய ஒருவரை சுட்டிருக்கிறார்கள். அவரைச் சுட வேண் டிய அவசியம் என்ன என்றெல்லாம் இதுவரை காவல்துறை யினர் கூறவில்லை.
* * *
காங்கோ தலைநகர் பிரஸ்ஸாவில்லேயில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 பேரைத் தாண்டிவிட்டது. மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் மின்சாரக்கசிவு ஏற்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. நாசவேலை நடை பெற்றிருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: