திருப்பூர், மார்ச். 5-வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துக் காத்திருப்போர், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கிளைகளை அணுகி தேவையான ஆவணங்களை கொடுத்து கடன் மானியம் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக தமிழக அரசு தொழில் மானியத் தொகை ரூ.75 லட்சம், பயிற்சி உதவித் தொகை ரூ.1 லட்சம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.5.98 கோடி மானியம் உள்ளடக்கிய வங்கிக் கடன்கள் வழங்குவதற்காக 1,215 விண்ணப்பங்களை வங்கிக் கிளைகளுக்கு மாவட்டத் தொழில் மையம் பரிந்துரைத்து அனுப்பியுள்ளது.
இதுவரை 16 பயனாளிகளுக்கு ரூ.8.04 லட்சம் வங்கிக் கடன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் 12 நிறுவனங்களுக்குரிய மானியத் தொகை ரூ.6.69 லட்சமும் தொழில் மையத்தால் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மனுதாரர்கள் தமது வங்கிக் கிளைகளை அணுகி தேவையான கூடுதல் ஆவணங்களை அளித்து வங்கிக் கடன் ஒப்பளிப்பு பெற்று மாவட்டத் தொழில் மையத்தில் அளித்து மானியம் பெற்று பயனடையும்படி மாவட்ட ஆட்சியர் மதிவாணன் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: