சீர்காழி, மார்ச் 5-
சீர்காழி தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட் டுள்ளனர்.கர்ப்பிணிப் பெண்க ளுக்கு இரும்புச் சத்துள்ள மருந்தை குளுக்கோஸில் கலந்து போடுவார்கள். ஆனால் இங்கு மருத்துவ மனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு டிரிப்ஸ் போட குளுக்கோஸ் பாட் டில் இல்லை. அதனால் சிகிச்சைக்காக வரும் கர்ப் பிணி பெண்களிடமும் மற் றும் வெளி நோயாளிகளி டமும் வெளியில் தனியார் மெடிக்கலில் வாங்கி வரச் சொல்லியும் சிகிச்சையளிக் கின்றனர்.
இதனால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சீர்காழி தாலுகாவில் உள்ள நல்லூர், திருமுல் லைவாசல், மாங்கனாம் பட்டு, குன்னம், மாதிர வேளூர், வள்ளுவக்குடி, திரு வெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய ஆரம்ப சுகா தார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத் தில் இரண்டு மருத்துவர்கள் பணிக்கு இருந்தும் மூன்று நான்கு நாட்களாக இரு வருமே மருத்துவமனைக்கு வராததால் அங்குள்ள திரு முல்லைவாசல், தாழந் தொண்டி, தொடுவாய், கூழையார் போன்ற ஊர் களை உள்ளடக்கிய கிரா மங்களில் உள்ள பொதுமக் கள் பெரும் அவதிக்குள் ளாகினர். சம்பந்தப்பட்ட மாவட்டசுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நட வடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: