ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப்பிறகு பெட்ரோல், டீசல் விலைஉயரும் என்பது வெறும் யூகம்தான் – மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி.
ச.சா –
ஆமா… தேர்தல் முடிஞ்சா மட்டுமல்ல,, எப்பவுமே உயர்த்து வீங்களே…??
* * *
சில விமான நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக மாநில அரசு மீது மத்திய அரசு சுமையை ஏற்படுத்துகிறது – தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்.
ச.சா – சரிதான்… ஆனா நீங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணிநேரம் மின்சாரம் தர்றதுக்கு மக்கள இருட்டுல தள்ளு றீங்களே…??
* * *
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை – இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்.
ச.சா – ஜனநாயகம்னா உங்களுக்கு பிடிக்கவும் செய்யாதே…?
* * *
பாலியல் வன்கொடுமைகள் என்று கூறி மேற்கு வங்கத்தின் புகழைக் கெடுக்க விரும்புகிறார்கள் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
ச.சா – நீங்க சொல்ற மூணு சம்பவங்கள்லயும் அது உறுதிப் படுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்தது உங்க தலைமைல இயங்குற காவல்துறைதானே…??

Leave a Reply

You must be logged in to post a comment.