கோவை, மார்ச் 5-தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளையொட்டி கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும் என்று மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படடது.
இதையடுத்து 49-வது வார்டில் உள்ள லட்சுமிபுரம் முத்துநகரில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.இந்த புதிய நூலகத்தை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் 400 மாணவ-மாணவிகளுக்கு நூலகத்தின் அடையாள அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மலரவன், துணை மேயர் லீலாவதி உன்னி,மண்டல தலைவர் ஆதி நாராயணன், வரிவிதிப்புக்குழு தலைவர் பிரபாகரன், கவுன்சிலர் குணாளன்,.உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: