கொத்தூரில் மாதர் சங்கம் கிளை துவக்கம்
ஓசூர், மார்ச். 5-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் மூக்கண் டப்பள்ளி பகுதி கொத்தூரில் கே. பி. ஜானகிஅம்மாளின் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கிளை துவக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் ஜேம்ஸ் அஞ்சலா மேரி கலந்து கொண்டார்.கிளைத் தலைவராக முனிரத்தினா, செய லாளராக சரஸ்வதி, பொருளாளராக மஞ்சு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் வாலிபர் சங்கம் தெருமுனை பிரச்சாரம்
புதுச்சேரி, மார்ச். 5-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரக்குழு மாநாட்டை விளக்கி தெருமுனைப்பிரச்சா ரம் நடைபெற்றது.அரியாங்குப்பத்தில் துவங்கிய பிரச்சாரம் முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, சின்னமணிக்கூண்டு, நேருவீதி,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்,நகரகமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் பார்த்தசாரதி,எஎப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று பேசினர்.
பாராட்டு விழா
புதுச்சேரி, மார்ச். 5-
சேவல் கட்டு நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற மா. தவசிக்கு மாணவர் பொது நல தொண்டு இயக் கம் சார்பில் பாராட்டு விழா புதுச்சேரியில் நடை பெற்றது. இவ்விழாவில் பாவலர் சீனு தமிழ்மணி நாவ லின் ஆய்வு உரை நிகழ்த்தினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இளம் எழுத்தாளர் மா. தவசி ஏற்புரை வழங் கினார். கு.அ. தமிழ்மொழி வரவேற்றார். விழாவில் புலவர் சி. வெற்றிவேந்தன், மு. பாலசுப்பிரமணியம், பைரவி, பாவலர்கள் அரங்க நடராஜன் பாலவெங்கட ராமன், தமிழ்நெஞ்சன், உமாபதி, லட்சுமி, சதாசிவம், மணி மாறன், தமிழ் நிதி வேந்தன், குமாரி, ராமமூர்த்தி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: