கோவை, மார்ச். 5-கோவை உள்ள கேபிள் டிவி கார்ப்பரேசன் ஒளிபரப்பு மையத்திற்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரனிடம் மாவட்ட கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் சங்க ஒருங்கினைப்புக் குழுவினர் மனு அளித்தனர்.
அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: அரசு கேபிள் டி.வி ஒளிப்பரப்பு மையத்தில் மின் வெட்டு ஏற்படும்போது ஜென்செட் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ஜென்செட் இயக்க டீசல் ஏற்பாடு செய்துகொடுக்கவில்லை.
ஆனால் மின்வெட்டு ஏற்படுமபோது ஒளிபரப்பையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் ஒளிபரப்பு தடைபடுகிறது. இதனால் கட்டணம் வசூலிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: