விழுப்புரம், மார்ச். 3 -விழுப்புரம் மாவட்டத் தில் அறிவிக்கப்பட்ட நேர த்தை விட கூடுதல் மின் வெட்டால் விவசாயிகள், மாணவர்கள், கூலித் தொழி லாளர்கள், சிறு, குறு வியா பாரிகள் அவதிப்படுகின் றனர்.விழுப்புரத்தில் தினமும் கிராமப்புறங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையும் மாலை 4 முதல் 7 மணிவரை யிலும் இரவு நேரங்களில் கூடுதலாக 3 மணி நேரமும் மின்வெட்டு உள்ளது. இத னால் விவசாயிகள் பயி ரிட்ட விளைச்சலுக்கு தண் ணீர் பாய்ச்சமுடியாமல் அவதிப்படுகின்றனர். விவ சாயத்திற்கு வழங்கும் மும் முனை மின்சாரம் நள்ளிரவு 3 மணிநேரம் மட்டுமே அது வும் தொடர்ச்சியாக இல்லா மல் விட்டுவிட்டு வழங்கப் படுகிறது. இதனால் முழுமை யாக விவசாயம் செய்ய முடிய வில்லை. விவசாய கூலித் தொழிலாளிகள் ஊரை விட்டு வெளியேறும் நிலை க்கு தள்ளப்பட்டு விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள் ளது.மாணவர்களுக்கு பள்ளி களில் இறுதி தேர்வு நடை பெற உள்ள இந்த நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள் ளதால் எதிர்காலம் வீணாகி விடும் என்ற அச்சஉணர் வால் படிப்பில் முழுமை யாக கவனம் செலுத்த முடி யால் அவதிப்படுகின்றனர்.ஒரு சில கிராமங்களில் மாணவர்களுக்கு காலை உணவே தயார்படுத்தித் தர முடியவில்லை என தாய் மார்கள் புலம்புகின்றனர்.சிறு, குறு வியாபாரி களான நகல் எடுக்கும் கடை, சிறிய உணவகங்கள் வியாபாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் மாத வாடகை கூட கட்டமுடி யாத நிலைக்கு தள்ளப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் டி. ஏழு மலை கூறுகையில் விவசாயி களுக்கு 3 மணிநேரம் மட் டுமே மும்முனை மின் சாரம் வழங்கி வருவதால் கால் ஏக்கருக்குக்கூட தண் ணீர் பாய்ச்ச முடிவதில்லை. அரசு அறிவித்தது 8 மணி நேரம். ஆனால் அறிவிக்கப் படாத மின்வெட்டால் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயம் மட்டு மல்ல, விவசாயம் சார்ந்த தொழில்களும் அழியும். எனவே மின்சாரத்தை முறை படுத்தி வழங்கவேண்டும் என்றார்.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் கே. கலியன்,அரசு ரூ 16.50க்கு மின் சாரத்தை வாங்கி தனியார் கம்பெனிகளுக்கு ரூ 4.50 க்கு விற்பனை செய்கிறது. அவர் களுக்கு தடையில்லா மின் சாரம் வழங்குகிறது. ஆனால் நம்நாட்டின் முதுகெலும் பான விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் மட் டுமே வழங்குவது கண்டிக் கத்தக்கது என்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ஆனந் தன், தமிழ்நாட்டை இந்தியா வின் முன்மாதிரி மாநில மாக மாற்றிக்காட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் தற் போது இந்தியாவின் இரு ண்ட முன்மாதிரி மாநில மாக மாற்றிவிட்டார் என் றார். ஜனநாக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஆர். கே. தமிழ்செல்வன் இளை ஞர்கள் வேலைவாய்ப் பையும், கல்வி அறிவையும் இழந்து வருவதால் பல் வேறு வடிவங்களில் மாவட் டம் முழுவதும் பிப்.12ல் போராட்டம் நடத்த உள் ளதாகக் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.