கோவை, மார்ச். 5-குடும்ப அட்டைகளை புதுப்பிக்க தவறியவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கோவை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளை நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று புதுப்பிக்கும் பணி கடந்த பிப்.28ந் தேதியுடன் நிறைவடைந்ததது. இந்நிலையில் உடல் நலக்குறைவு, வயது முதிர்வு மற்றும் புனித பயணம் மேற்கொண்டோர் உள்ளிட்டவர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் வருகிற மார்ச்-31 ந்தேதி வரை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதன்படி (hவவயீ://210.212. 62.90:8080/நேறகஉயீ/உயசனஎயடனைவைல.னடி) என்ற இணையதள முகவரியில் மார்ச் 1 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு இணையதளம் மூலம் பதிவு செய்து புதுப்பிக்கப்படும் குடும்ப அட்டைகளுக்கான புதுப்பித்தல் சீட்டு நகல் இரண்டு எடுத்து அவற்றில் குடும்ப அட்டைதாரர் கையொப்பமிட்டு சீட்டு நகலின் ஒன்றினை குடும்ப அட்டையிலும், மற்றொரு நகலினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைவழங்கல் பதிவேட்டிலும் ஒட்டிக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: