அம்பத்தூர், மார்ச், 5 –
திருமுல்லைவாயல் நாகம்மை நகரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பில் வசிப்பவர் செல்வமணி (36). தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5ம் பட்டாலியனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். அதிகாரி ராஜசேகருக்கும் கார் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி அருள்மணி. அருள்மணியும் சிறப்புக் காவல் படையில் ஏட்டாக பணிபுரிகிறார்.இவர்களது குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிப்பவர் கந்தவேல் (33). ஆவடி போக்குவரத்து காவலர் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜம்மாள். ராஜம்மாளும் சிறப்புக் காவல்படையில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கந்தவேல் தனது மகன் ஆதவனுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது பந்து அங்கு நிறுத்தப் பட்டு இருந்த அதிகாரி காரில் பட்டது. இதை பார்த்த செல்வமணி வந்து கந்தவேலை தட்டிக் கேட்டார். இதில் வாய்த் தகராறு முற்றியதால் கோபம் அடைந்த கந்தவேல் தான் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் செல்வமணி தலையில் அடித்தார். இதை தடுக்க வந்த அவரது மனைவி அருள்மணியையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, மார்ச், 5 –
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனி டெல்லி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். டெல்லியை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான குல்ஷான் குமாரும் அதே விமானத்தில் டெல்லி செல்வதாக இருந் தது. விமான நிலையத்தில் குல்ஷான் குமார் உள்ளிட்ட பலர் சோதனைக்காக வரிசையில் நின்றிருந்தனர். ஆனால் ரியாஸ் வரிசையில் நிற்காமல் முன்னே சென்ற தாகக் கூறப்படுகிறது. இதனை குல்ஷான் தட்டிக் கேட் டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. ரியாஸ் அகமது கனி மீது குல்ஷான் புகார் அளித்தார். இந்த புகாரினை தொடர்ந்து அதிகாரிகள் வழக்கறிஞர் ரியாஸை கைது செய்துள்ளனர்.வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனி கைது செய்யப் பட்ட சம்பவத்தை கண்டித்து சில வழக்கறிஞர்கள் விமான நிலைய காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக் கிழமை இரவு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: