கோவை, மார்ச் 5-கோவையை அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் ரான்பா காஸ்டிங்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிஐடியு சங்கத்தின் உறுப்பினரும், சிபிஎம் கிளைச் செயலாளருமான வேல்முருகன் (வயது 36) ஞாயிறன்று காலமானார்.
இவரது மறைவு செய்தி அறிந்து சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, இன்ஜினியரிங் அரங்க செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சித் தலைவர் பி.சுந்திரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கே.தங்கவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.நடராஜன், உள்ளிட்ட திரளானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: