உலக அளவில் நடப்பு பருவத்தில் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் காபி ஏற்றுமதி 3 சதவீதம் சரிந்து 3.26 கோடி மூட்டைகளாக உள்ளது. இது, 2010-2011 பருவத்தின் இதே காலத்தில் 3.36 கோடி மூட்டைகளாக இருந்தது. ஒரு மூட்டை என்பது 60 கிலோ காபி கொட்டைகளை கொண்டதாகும். ஜனவரி மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி 79.90 லட்சம் மூட்டைகளாக இருந்தது.
இது 2011 ஜனவரியில் 88.70 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஆக அம்மாதத்தில் ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்துள்ளது. ஜனவரி வரையிலான 12 மாதங்களில் ஏற்றுமதி 10.35 கோடி மூட்டைகளாக உயர்ந்துள்ளது. இது 2011 ஜனவரி வரையிலான ஓர் ஆண்டில் 9.82 கோடி மூட்டைகளாக இருந்தது. இந்நிலையில் நடப்பு பருவத்தில் உலக காபி உற்பத்தி 1.3 சதவீதம் குறைந்து 13.24 கோடி மூட்டைகளாக சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: