கரூர், மார்ச் 5-
தமிழகத்தில் முதல் முறை யாக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வர் சங்கப்பிள்ளை (65). கட்டிட கூலித் தொழிலாளியான இவர், கடந்த பல ஆண்டுகளாக முழங் கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்க பிள்ளைக்கு கடந்த 25ம் தேதி தமிழக முதல்வரின் விவாக்கம் செய்யப்பட்ட காப்பீட்டுத் திட் டத்தின் கீழ் அதிநவீன செயற்கை மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் உமேஸ்வரி இதுபற்றி கூறுகையில், விரி வான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதன்முறை யாக கரூர் அரசு மருத்துவமனை யில் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 17 பேர் இதுவரை பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை பெற்றுள் ளனர் என்றார்.உடன் மருத்துவ கண்கா ணிப்பாளர் ரகுநாத், இருக்கை மருத்துவர் பொன்னுசாமி, எலும்பு முறிவு சிகிச்சை மருத் துவர்கள் ராஜேந்திரன், அன் பழகன் உட்பட பலர் இருந் தனர்.

Leave A Reply

%d bloggers like this: