முதலாவது உலக மகளிர் கபடி சாம்பியன் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளிகளில் ஈரானை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.பா
ட்னாவில் கங்கர் பாக்கில் உள்ள பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் முதலாவது மகளிர் கபடி உலக சாம்பியன் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. பதினாறு நாடுகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் ஈரானும் இந்தியாவும் மோதின. இந்திய மகளிர் தொடக்கம் முதலே ஆதிக்கமாக ஆடினர். ஈரான் மகளிரும் சளைக்காமல் ஆடினர்.
ஆனாலும் இந்திய மகளிரின் திறமையும் வேகமும் சிறப்பாக இருந்தது. நிரம்பி வழிந்த அரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் இந்திய அணி மேலும் சிறப்பாக ஆடியது. முதலாவது பாதியில் இந்தியா 19-11 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஈரான் ஆவேசமாக ஆடியது. ஈரான் 8 புள்ளிகளை வென்றது.
இந்தியாவால் 6 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. காலையில் நடந்த அரை இறுதிகளில் இந்தியா 60-21 என ஜப்பானையும், ஈரான் 46-26 என தாய்லாந்தையும் தோற்கடித்தன.உலகக்கோப்பையை பீகார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி இந்திய அணித் தலைவர் மம்தா பூஜாரியிடம் அளித்தார். அணிவீரர்களுக்கு பதக்கங்களையும் அளித்தார்.
பாடலிபுத்ரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்கா ஈரான் அணிக்கு இரண்டாம் இடத்துக்குரிய கோப்பையையும் பதக்கங்களையும் வழங்கினர். மாநில கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹி, சர்வதேச கபடி அமைப்பின் தலைவர் ஜனார்த்தன் சிங் கெலோட் ஆகியோர் தாய்லாந்து, ஜப்பான் அணிகளுக்கு வெண்கலப் பதக்கங்களை வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: