பருத்தி ஏற்றுமதிக்கு தடை
புதுதில்லி, மார்ச் 5 –
உள்ளூர்ச் சந்தையில் பருத்தியின் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில், பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. மறு அறி விப்பு வரும் வரை பருத்தி ஏற் றுமதி தடை செய்யப்பட்டுள் ளது என்று அந்நிய வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கை கூறுகிறது.ஏற்கெனவே அனுமதிக் கப்பட்ட பதிவுச்சான்றிதழ் களின் படியும் ஏற்றுமதி அனு மதிக்கப்படாது என்று அறிக் கை கூறுகிறது. நடப்பு சந்தை ஆண்டில் இந்தியா, 85 லட்சம் பருத்தி பேல்களை (ஒரு பேல் என்பது 170கி) ஏற் றுமதி செய்துள்ளது. அக்டோ பர் முதல் செப்டம்பர் வரையி லான 2010-11 சந்தை ஆண் டில் 355 லட்சம் பருத்தி பேல் களை ஏற்றுமதி செய்துள்ளது.
மலேசியாவில் சாலை விபத்தில்
2 இந்தியர்கள் பலி
கோலாலம்பூர், மார்ச் 5 –
மலைப்பாதையில் வேக மாகச் சென்ற பேருந்து கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்த தால் இரண்டு இந்தியர்கள் பலியாகினர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.மலைவாசஸ்தலமான ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் இருந்து மலைச்சாலையில் இரண்டு ஓட்டுநர்கள் உள் ளிட்ட 24 பயணிகளுடன் படுவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பேருந்து சாலை பிரிப்பானில்முட்டிசாலையின் மறுபக்கத்தில் விழுந்து நொ றுங்கியது.இவர்கள் அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 50 வயதான பெண் சம்பவ இடத் திலேயே இறந்தார். மற்றொரு ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நான்கு பேர் கோலா லம்பூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றனர். விபத்து குறித்து கோலாலம்பூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாக இந்திய தூத ரகம் கூறியது.
மணிப்பூர் வேட்பாளர் வீட்டின் மீது வெடிகுண்டெறி
இம்பால், மார்ச் 5 –
இம்பால் மேற்கு மாவட் டத்தில் நவோரியா பகாங் லக்பா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர் ஆர்.கே.ஆனந்த் வீட் டின் மீது அடையாளம் தெரி யாத தீவிரவாதிகள் வெடி குண்டை வீசி எறிந்தனர். குண்டு எறியப்பட்ட சமயம் ஆர்.கே. ஆனந்தும் குடும்பத் தினரும் வீட்டில் இருந்தனர்.சம்பவம் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடந்தது.
இரு ளில் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். ஏழு தீவிரவாத அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக்குழு இச்சம்பவத் துக்கு பொறுப்பேற்று அறிக் கை விடுத்துள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மணிப்பூர் ‘புரட்சி இயக்க’த் துக்கு எதிராக காங்கிரஸ் நிற் பதால் காங்கிரஸ் வேட்பாளர் களும் அவர்களின் ஆதரவா ளர்களும் தங்களால் தாக்கப் படுகின்றனர் என்று அறிக் கை கூறுகிறது.
ஓமன் வாகன மோதலில்
6 இந்தியர் சாவு
துபாய், மார்ச் 5 –
ஓமன் தலைநகர் மஸ்காட் அருகே உள்ள மாமூர் நகரில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிருடன் எரிந்து பலியா கினர்.தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் இவ்விரு வாகனங் கள் மோதிக் கொண்டதில் ஆறு கேரள தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து மடிந்தனர். சம்பவ இடத்திலேயே இருவர் மாண்டனர் மற்றும் இருவர் மருத்துவமனையில் தீக்காயங் களுக்குப் பலியாகினர் என்று இந்தியன் சோசியல் கிளப் பின் நலச்செயலாளர் பி.எம். ஜபிர் கல்ப் நியூஸ் செய்தித் தாளிடம் கூறியுள்ளார்.அனில்குமார் சதானந்தன் (35), விஷ்ணு பார்கவன் வில் லப்பில் (42), பிரசாத்பால கிருஷ்ண பிள்ளை(34), சஜு குமார் உன்னி கிருஷ்ணன் பிள்ளை(29), ஜோகன்சன் அனில்(43), தாஸ் ஆகிய ஆறு பேரும் இறந்துவிட்டனர் என அடையாளம் காணப்பட் டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: