சீர்காழி, மார்ச் 5-
7ஆம் வகுப்பு மாணவி ராதிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் குற்ற வாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி யும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதி ரில் மாலை 4 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திட்டைரோடு நங்க நலத் தெரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜ் (45). இவரது மகள் ராதிகா(12). சீர்காழியில் எல்எம்சி மேல்நிலைப் பள்ளி யில் 7-ம் வகுப்பு படித்து வந் தார். வழக்கம் போல் 2ம்தேதி காலை ராதிகா பள்ளிக்குச் சென்றார். ஆனால் மாலை 5.30 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் திட்டை ரோட்டில் உள்ள காலி வீட்டு மனை அருகே நாரத்தை மரத் தில் ராதிகா இறந்த நிலையில் தூக்கில் தொங்கினார். மேலும் அப்பகுதியில் ராதிகாவின் உள் ளாடைகள், புத்தகம், பை, வாட்ச் மற்றும் ஜெயின் ஆகி யவை சிதறிக்கிடந்தது.
சம்பவம் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுகுணா எஸ்.ஐ, சுரேஷ்குமார், தேவ பாலன் ஆகியோர் ராதிகாவின் உடலை கைப்பற்றினர். மேலும் இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த உத்திராபதி மகள் (ராதி காவின் தோழி) காயத்திரியிடம் போலீசார் விசாரித்தனர். சீர்காழி நேரு சாலையைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் விஜய்(21)யும் செல்வம் மகன் அஜித்(20)தும் நானும் ராதிகா வும் பள்ளியிலிருந்து மதியம் சாப்பிட வீட்டிற்கு வரும் போது எங்களை பின் தொடர்ந்து வந்தார்கள், திட்டை ரோட்டில் காலிமனையிடத்தில் வழிமறித்து ராதிகாவை அஜித் பாலியல் பலாத்காரம் செய்தார்.
நான் பயந்து ஓடி அருகில் ஒளிந் திருந்தேன். பிறகு விஜய் கெடுக்க முயற்சித்தார். ராதிகா மறுத்ததால் அங்கே இருந்த மரத்தில் ராதிகாவின் துப்பட் டாவால் மரத்தில் கட்டி தூக்கு போட்டுவிட்டு ஓடிவிட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.விசாரணை முடிந்தவுடன் போலீசார் அஜித், விஜய் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித் தும் குற்றவாளிகள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கக் கோரியும், உயிரிழந்த மாண வியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சீர்காழி வட்டச் செயலாளர் சிவிஆர் ஜீவானந்தம் தலைமை தாங்கி னார். மாநில செயற்குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் எம் எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், வி.மாரிமுத்து, நாகை மாலி எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்ரமணியன், து.கணேசன், வி.அமிர்தலிங்கம், ஸ்டாலின், ஜி.கலைச்செல்வி, பி.சீனி வாசன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஆர்.ராமானுஜம், கே. எம்.குணசேகரன், டி.கோவிந்த சாமி, என்.செல்வம், ஜி.திலக வதி, வி.சிங்காரவேலு, ஏ.லத் தீப், வட்டக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக் கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.