அம்பத்தூர், மார்ச் 5 –
அம்பத்தூரை அடுத்த சோழபுரத்தில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் ஆகாஷ் (12). திருவேங்கட நகரில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். சனிக்கிழமை காலை நண்பர்களுடன் விளையாட சென்ற ஆகாஷ் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையே அம்பத்தூர் ஏரியில் சிறுவன் உடல் மிதப்பதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சனிக் கிழமை மாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் மிதந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவன் யார் என்பது உடனடியாகத் தெரி யவில்லை.இந்நிலையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகன் ஆகாஷை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை பாலமுருகன் புகார் அளித்தார்.
காவல் துறையினர் ஏரியில் கைப்பற்றிய சிறுவனின் புகைப்படத்தை பாலமுருகனிடம் காட்டி விசாரித்தனர். புகைப்படத்தை பார்த்த பாலமுருகன் புகைப்படத்தில் இருப்பது தனது மகன் ஆகாஷ் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்து அம்பத்தூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

Leave A Reply

%d bloggers like this: