இந்திய ஸ்டேட் வங்கியில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பதவியின் பெயர் :
1.உதவியாளர் (ஹளளளைவயவேள)
2.சுருக்கெழுத்தர் (இந்தி, ஆங்கிலம்) (ளுவநnடிபசயயீhநச – ழiனேi, நுபேடiளா)
காலியிடங்கள் : 9500 + 12251.உதவியாளர் : 8500 + 10502.சுருக்கெழுத்தர் : 1000 + 175 இந்தி : 900 ஆங்கிலம் : 100
சம்பள விகிதம் : ரூ. 7,200 – ரூ.19,300
வயது வரம்பு : 1.12.2011-ம் தேதியின்படி 18 வயது முதல் 28 வயது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30.11.1983 முதல் 1.12.1993-ம் ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பனிரெண்டாம் வகுப்பில் (10 + 2) 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் முழுநேர டிப்ளமோ படிப்பில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் : உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஓபிசி மற்றும் இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.350ம், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தி சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணம் (எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50).ஆங்கில சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணம் (எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50).இந்தி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தர் இரண்டிற்கும் விண்ணப்பிக்க ரூ.650 கட்டணம் (எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50).
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள் : 27.5.2012 மற்றும் 3.6.2012
தேர்வு நடைபெறும் மையங்கள் : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகவல்களை உட்செலுத்திய பின் பெறப்படும் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின், பதிவு செய்த இரண்டு நாட்கள் கழித்து எஸ்.பி.ஐ வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் மூன்று நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.3.2012.
மேலும் தகவல்களுக்கு, www.statebankofindia.com , www.sbi.co.in

Leave A Reply

%d bloggers like this: