சண்டிகர் காமெட்ஸ் அணி உலகத்தொடர் ஹாக்கி சுழல் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை மஹீந்திரா ஸ்டேடியத்தில் சண்டிகர் அணி, மும்பை மெரைன்ஸ் அணியுடன் மோதியது.
மும்பை அணி இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனாலும் சண்டிகர் அணி அசராமல் தாக்குதல் அடித்து 4-2 என்ற கோல்களில் மும்பை அணியைத் தோற்கடித்தது.ஜலந்தரில் நடந்த மற்றொரு சுழல் போட்டியில் ஷேர்-இ-பஞ்சாப் அணியும் புனே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் 3-3 எனச் சமன் செய்து கொண்டன. தீபக் தாக்குரும் பிரப்ஜோத் சிங்கும் கொடுத்த முன்னிலையை பஞ்சாப் அணியால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

Leave A Reply

%d bloggers like this: