தாதர், மார்ச் 5-
மும்பையில் இலவச வீடுகள் வழங்கக் கோரி மில் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது, காவல் துறையினர் நடத்திய தடி யடிச் சம்பவத்திற்கு கண் டனம் தெரிவித்தும் அனை வருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தியும் வரும் சட்ட மன்ற கூட்டத்தொடரின் போது சாகும்வரை உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள் ளனர்.
மும்பை முழுவதும் ஏரா ளமான மில்கள் மூடப் பட்டதால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு, மூடப்பட்ட மில் நிலத் திலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேலை இழந்த தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.வேலை இழந்த தொழி லாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். இவர்கள் அனை வருக்கும் மும்பைக்குள் வீடு கட்டிக் கொடுக்கமுடியா மல் மாநில அரசு திணறிக் கொண்டிருக்கிறது. மஹா டாவில் 16 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டியுள்ளது.இந்த வீடுகளை ஒதுக் கீடு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டதில் 1.10 லட் சம் பேர் விண்ணப்பித்துள் ளனர். 16 ஆயிரம் வீடுகளை இவர்களுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என் பதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், இருக்கின்ற வீட்டை விற் பனை செய்து, அதில் கிடைக் கும் பணத்தை மில் தொழி லாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதாகக் கூறப் பட்டது. அதை தொழிலா ளர்கள் ஏற்கவில்லை. அனைத்து தொழிலா ளர்களுக்கும் வீடு கொடுக்க வேண்டுமானால் அவர்கள் கட்டுமானச்செலவை ஏற்க வேண்டும் என்று மாநில அரசு கூறியது. அதையும் மில் தொழிலாளர்கள் ஏற்க வில்லை. அனைவருக்கும் மும்பைக்குள் வீடு வேண் டும் என்று வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால் வீடுகள் கட்ட நிலம் இல்லை என்று அரசு கூறிவிட்டது.
இதையடுத்து மூடப் பட்ட மில் நிலங்களை தேசிய டெக்ஸ்டைல் கழகம் மில் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கவேண்டும் என்று மில் தொழிலாளர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை முன் வைத்து நேற்று மில் தொழி லாளர்கள் ரே ரோட்டில் இருந்து தாதருக்கு பேரணி நடத்தினர்.அப்போது பேரணி யாகச் சென்றபோது ஒரு சில இடங்களில் காவல் துறையினருக்கும் மில் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதனால் சில இடங்களில் தொழிலாளர் கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது காவல் துறை யினர் தடியடி நடத்தினர். இதில் பெண்கள் உட்பட தொழிலாளர்கள் காய மடைந்தனர்.
காவல்துறையினரின் தடியடியைக் கண்டித்தும் அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தியும் இம் மாதம் 30ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத் தவும், சட்டமன்ற கூட்டத் தொடரின்போது மும்பை யில் சாகும் வரை உண்ணாவிர தம் இருக்கவும் மில் தொழி லாளர்கள் முடிவு செய்துள் ளனர். தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங் களும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: