உலர் பழ வகைகளில் ஒன்றான வால்நட்டை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கெட்ட கொழுப்பைக் குறைப்பது மற்றும் புரதச்சத்தைத் தருவது ஆகிய இரண்டு வேலையையும் சேர்த்தே அது செய்கிறது. அதேவேளையில், இந்தக் கொட்டைகள் அதிக அளவு கலோரிகளைக் கொண்டவையாகும். அதனால் பெரிய எண்ணிக்கையில் இதை உட்கொள்ளக்கூடாது. காலை சிற்றுண்டியோடு ஒரு வால்நட், மதிய வேளையில் ஒன்று மற்றும் மாலையில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். துர்நாற்றம் உடைய எதையும் நாம் விரும்ப மாட்டோம். இதனால் கொட்டைகளை உடைக்காமல் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும் அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: