சேலம்.மார்ச்.5- சேலம் ஜங்சன் ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் தபால் பைகள் மலைபோல் குவிந்தன. 24 மணி நேரமும் இடைவிடாமல் வேலை செய்து பொது மக்கள் கடிதங்களை இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஆர்.எம்.எஸ் தபால் பிரிப்பு அலுவலகங்கள் கடந்த பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய அஞ்சல்துறை லாப நோக்கில் செயல்பட உரிய ஆலோசன் வழங்க கோரி மத்திய அரசு அமெரிக்க நிறுவனமான மெக்கன்சியிடம் ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அக்கம்பெனி சிபாரிசுபடி 400-க்கும் மேற்பட்ட ஆர்எம்எஸ் அலுவலகங்களை 15-2-2012 வரை 89 ஆக குறைந்தது. இதன்படி தமிழ்நாட்டில் 40 ஆர்எம்எஸ் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த கடித பிரிப்பு சென்னை,காட்பாடி. சேலம், கோவை, திருநெல்வேலி,மதுரை,திருச்சி அலுவலகங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
தர்மபுரி நகரத்தில் பதிவு செய்யப்படும் தபால்கள் பொம்மிடி மொரப்பூரில் அடுத்த நாள் டெலிவரி ஆனது. தற்போது தர்மபுரியில் இருந்து மொரப்பூர் செல்லும் தபால்கள் முதலில் சேலம் ஆர்எம்எஸ் சென்று அங்கிருந்து காட்பாடி ஆர்எம்எஸ் சென்று பின்பு அவர்கள் ஜோலார் பேட்டை ஆர்எம்எஸ்ஸுக்கு அனுப்பி அங்கிருந்து தான் மொரப்பூரில் பட்டுவாடா செய்யப்படும். இதனால் 3 நாட்கள் தாமதமாகிறது.ஈரோடு, தர்மபுரி மாவட்ட தபால்கள் சேலத்துக்கும்,திருப்பூர்,பொள்ளாச்சி,ஊதகை மாவட்ட தபால்கள் கோவைக்கும் கொண்டு செல்லப்பட்டு பிரிக்கப்படுகின்றன.
இதனால் தபால் பைகள் சேலம் ஆர்.எம்.எஸ்., கோவை ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. இந்திய நாட்டு மக்களுக்கு கிடைத்து வந்த சிறந்த தபால் சேவை அமெரிக்க கம்பெனி மெக்கன்சியின் சிபாரிசால் கூரியர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசின் நடவடிக்கை துணை போகிறது. பழைய நிலை திரும்ப வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.