நாகர்கோவில், மார்ச் 5-
நீண்ட போராட்டத்தின் பயனாக கோட்டாரில் ஆயுர்வேத மருத்துவக் கல் லூரிக்கு அனுமதி பெற்று கல்லூரி செயல்பட்டு வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது. ஆனால், இந்த ஆண்டு போதிய அடிப் படை வசதியில்லை எனக்கூறி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு மத் திய அரசின் ஆயுஷ் எனும் அமைப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது.
கல்லூரி மற்றும் மருத் துவமனை போதிய அடிப் படை வசதியில்லை என வும் அதன் மேம்பாட்டுக்கு அரசு போதிய அக்கறை காட்டவேண்டும் எனவும் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. கடந்த ஆட்சியின்போது சிபிஎம் எம்எல்ஏக்கள் சட்ட சபையிலேயே இக்கருத்தை வலியுறுத்தினர்.செண்பகராமன்புதூரில் மூலிகைப் பண்ணையை செயல்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு உரிய வச திகள் ஏற்படுத்தி கல்லூரி வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தப்பட்டது.
ஆயி னும் அரசு அக்கறை காட்டா ததன் விளைவு, தற்போது வாழ்க்கையே சிக்கலுக்கு உள்ளாகி 48 மாணவர்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர்.நீதி கேட்டு கடந்த 15 நாட்களாகப் போராடியும் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டப் பாதையை கை விடுவதில்லை என தீர் மானித்துள்ளனர்.
இந்நிலையில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் என். முரு கேசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் முன் னாள் எம்எல்ஏ லீமாறோஸ், மாத வன், என்.எஸ்.கண்ணன், நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் அந்தோணி ஆகியோர் போராடும் மாண வர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சிபிஎம் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் மூலம் இப்பிரச் சனையை ஆட்சியாளர் களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: