சென்னை, மார்ச். 5 –
மலேசியாவின் லங்காவி யில் சமீபத்தில் நடைபெற்ற 15வது ஆசிய படகுப் போட் டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் வருண் தாக்கர் மற்றும் கணபதி கெல்பாண்டா ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.கடந்த ஆண்டு ஆசிய மற்றும் உலக சாம்பியனான கணபதி மற்றும் வருண் ஆகியோர் இந்த போட்டி யில் கடுமையாக போராடி வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.
இளைஞர்களுக் கான சர்வதேச படகு போட் டியில் இந்தியாவுக்கு வெளி நாட்டில் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும். இந்த இரு இளைஞர்களும் இதற்கு முன்பும் பல சர்வ தேச போட்டிகளில் பங்கேற் றுள்ளனர்.

Leave A Reply