கோவை, மார்ச், 5-அருந்ததியர் இளைஞரை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி நியாயத்திற்காக போராடிய கோவை பாப்பம்பட்டி அருந்ததியர் இளைஞர் மனோகரன் மீது சாதிய ஆதிக்க சக்தியினர் தாக்குதல் நடத்தினர். பல்வேறு அமைப்புக்களின் தலையீட்டின் பேரில் தாக்குதல் நடத்தியர்வர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புகாரை திரும்பபெற வேண்டும் மனோரகரை தொடர்ந்து சாதிய ஆதிக்க சக்தியினர் மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தலித் இளைஞரின் மிரட்டி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனோகரனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச்செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார், மனோகரன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: