சென்னை, மார்ச், 5 –
செவிலியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக அப் பலோ நிர்வாகத்துடன் திங் களன்று (மார்ச் 5) பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதனிடையே செவிலியர்க ளின் வேலைநிறுத்த போராட் டமும் தொடர்ந்து நடை பெற்றது.
சென்னையில் உள்ள அப்போலோ, ஃபோர்ட்டி, எம்எம்எம் ஆகிய மூன்று தனியார் மருத்துவமனை களை சேர்ந்த செவிலியர் கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளது தெரிந்ததே. மூன் றாம் நாளாக திங்களன்று தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில், குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயித்தல், இரவு பணி மற்றும் கூடுதல் பணி நேரத்திற்கான நியாய மான படித்தொகை வழங்கு தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், திங்க ளன்று காலையில் தொழி லாளர் ஆணையர் அலுவல கத்தில் அப்பலோ நிர்வாகத் திற்கும், செவிலியர்கள் நலச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், நிர் வாகம் இணக்கமான முடி வுக்கு வரவில்லை என்று செவிலியர்கள் தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்து பிரதி நிதிகள் வெளிநடப்பு செய் ததாகவும் தெரிவித்தனர்.
பின்னர் மாலையில் தொழிலாளர் ஆணை யத்திடம் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து செவிலியர் பிரதிநிதிகள் அதில் கலந்துக் கொண்டனர்.
இதனிடையே அப் போலோ மருத்துவமனை நுழைவா யில் அருகில் சுமார் 800 செவிலியர்கள் திங்களன்று காலை முதல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல் வேறு தொழிற்சங் கங்களின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: