உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்காக பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களோ தங்களது உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைப்பதற்காக ‘கொழுப்பு குறைப்பு தியானம்’ எனப்படும் புதிய தியான வகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த தியானத்தின் போது அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளால் வேறு பல நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் இந்த தியான வகுப்பிற்கு செல்கின்றனர்.
அவர்கள் தங்களது இதய நோய்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்டாடின்ஸ் (ளுவயவiளே) எனப்படும் மருந்தை உட்கொள்கின்றனர். இம்மருந்தை உட்கொள்வதால் அவர்களுக்கு நீரிழிவு மற்றும் ஞாபகமறதி போன்ற நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அமெரிக்க ஒழுங்காணையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் மருத்துவமனை சமூகத்தின் தலைவர் மற்றும் மருந்து மற்றும் நச்சு சோதனையாளரான டேவிட் லி கூடர் தெரிவிக்கையில், உலகத்திலேயே ஆஸ்திரேலியாவில் தான் ஸ்டாடின் எனப்படும் இம்மருந்து அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இதனால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இம்மருந்துகளை உட்கொள்ளும் அதிக பாதிப்பில்லாத இதய நோயாளிகள், இதுகுறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: