படக்குறிப்பு:
ஆட்டத்தின் 9ம் நிமிடத்தில் சென்னையின் சிங்ளேர் கோல் போட்டார்.
சென்னை அணி வெற்றி
சண்டிகர், மார்ச் 4-
சென்னை சீட்டாஸ் அணியின் சண்டிகர் பயணம் வீண் போகவில்லை. சண்டிகர் காமெட் அணியை சென்னை அணி 5-3 என வென்றது.வேகமான தாக்குதலும், இம்ரான் வர்சியின் கூர்மையான அடியும் அதன் வெற்றிக்கு காரணிகளாக அமைந்தன. முன் னாள் ஒலிம்பியன் ஆடம் சிங்ளேரும், ஜோசப் ரியர்டனும் நினைத்த நேரத்தில் சண்டிகரின் வளையத்துக்குள் ஊடுரு வினர். அதன் விளைவாக 7ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் வர்சி கோல் அடித்தார்.எட்டாவது நிமிடத்தில் வர்சியின் இரண்டாவது கோலும், 9ம் நிமிடத்தில் சிங்ளேர் அடித்த களக்கோலும் சென்னை அணியை 3-1 என முன்னிறுத்தின. இரண்டாவது கால் மணியில் ரமண்தீப்சிங் ஒரு கோல் அடித்து இடைவெளியைக் குறைத்தார்.ரேஹன்பட், சண்டிகரின் இரண்டாம் கோலை 39ம் நிமிடத்தில் அடித்த மறு நொடியில் வர்சி பெனால்டிகார்ன ரில் கோல் அடித்து இரண்டு கோல் இடைவெளியை தக்க வைத்தார். 64ம் நிமிடத்தில் சண்டிகரின் சுக்வீந்தர் சிங் ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். சென்னையின் ஆஸி.வீரர் மார்க் ஹாரீஸ் மறு நிமிடத்தில் கோல்அடித்து மீண்டும் இரு கோல் இடைவெளியை நிறுவினார். சண்டி கரின் முயற்சிகள் பலன் அளிக்காமல் அது தோற்றது.
மகளிர் பட்டத்தை குறிவைக்கும் ‘ஏஏஐ’
பஞ்சிம், மார்ச் 4-
தேசிய சதுரங்க அணி மகளிர் பட்டத்தைக் குறிவைத்து இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) காய் நகர்த்தி வரு கிறது. மகளிர் பிரிவின் ஐந்தாவது சுற்றில் ஏஏஐ அணி பெட் ரோலியம் அணியை 3-1 எனத் தோற்கடித்தது. ஆடவரில் ரெயில்வே ‘ஏ’ அணி ஏர் இந்தியா அணியை 2.5 – 1.5 எனத் தோற்கடித்தது. ரயில்வே 13 புள்ளிகளும் ஏஏஐ 8 புள்ளிகளும் எடுத்துள்ளன.பெட்ரோலியம் அணி பதிலி வீராங்கனை இல்லாததால் உடல் நலிவுற்ற எஸ்.ஆர்.ராதாவை மாற்ற முடியவில்லை. அத னால் ஒரு புள்ளியை இலவசமாக எதிரணிக்கு அளித்து வருகிறது. பெட்ரோலிய அணி ஏஏஐ அணியிடம் தோற்றதால் பட்டவேட்டையில் ஏஏஐ முன்னிலையில் உள்ளது. ஏர் இந் தியா, தமிழ்நாடு செஸ் குருகுல அணியை வென்றுள்ளது.ஏஏஐயும், ஏர் இந்தியாவும் தலா 8 புள்ளிகளில் உள்ளன. வென்ற ஆட்டப்புள்ளிகள் கணக்கில் ஏஏஐ இருபுள்ளிகள் அதிகமாக வைத்துள்ளது. ஏர் இந்தியா பட்டம் பெற வேண்டு மானால் அடுத்த இரு சுற்றுகளிலும் 4-0 என வெல்ல வேண்டும். அத்துடன் ஏஏஐ அடுத்த இரு சுற்றுகளில் 2.5 புள்ளிகளை இழக்க வேண்டும். ஆடவரில் ரயில்வே ‘ஏ’ அணி 13 புள்ளி களுடன் முதல் இடத்திலும் பெட்ரோலியம் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் ரெயில்வே ‘பி’ அணி 11 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பூபதி-பொப்பண்ணா இணைக்கு பட்டம்
துபாய், மார்ச் 4-
துபாய் தீர்வை இல்லா ஓபன் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் பொப் பண்ணா இணை பட்டம் வென்றது. சனிக்கிழமையன்று நடந்த போட்டியில் அவர்கள் போலந்தின் மாரியஸ் பிர்ஸ் டென்பெர்க் – மார்சின் மட்கோவ்ஸ்கி இணையை 6-4, 3-6, 1-0(5) என வென்றனர்.தனது 32வது பிறந்த நாளில் ஏடிபி உலகத்தொடர் போட்டி பட்டத்தை வென்றதில் பொப்பண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். முதல் செட்டில் இரு இணையும் தலா மூன்று ஆட்டங்களை எடுத்தனர். ஏழாவது ஆட்டத்தில் பிரிஸ் டென் பெர்க்கின் சர்வீஸ் ஆட்டத்தை முறித்து இந்திய இணை 4-3 என முன்னேறியது. பின்னர் தங்களது சர்வீஸ் ஆட்டத்தை வென்று 5-3 என முன்னிலை பெற்றது. போலந்து இணை தங்கள் சர்வீஸ் ஆட்டத்தை 5-4 என நெருங்கினர். அடுத்த தங்களது சர்வீஸ் ஆட்டத்தை இந்திய இணை வென்று 6-4 என வென்றது. இரண்டாவது செட்டில் போலந்து இணை வலுவாக ஆடியது. பொப்பண்ணாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறித்த இவர்கள் இரண்டாம் செட்டை 6-3 என வென்றனர். இரு அணிகளும் தலா ஒரு செட் எடுத்திருந்ததால் போட்டி சூப்பர் டை பிரேக்கர் அமலானது. எடுத்தவுடன் இந்திய இணை 5-1 என முன்னேறியது. போலந்து இணையின் முயற்சி பலன் அளித்த போதும் இந்திய இணை 10-5 என டை பிரேக்கரை வென்று பட்டத்தைக் கைப்பற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.