சென்னை, மார்ச், 4 -த
மிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் களுக்கு பணி நியமன ஆணைகள் அஞ்சல் வழி யில் சனிக்கிழமை (மார்ச் 3) அனுப்பப்பட்டன.அந்தந்த மாவட்டங்க ளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை யிலான குழுக்கள் இந்த ஆசி ரியர்களைத் தேர்வு செய் துள்ளன. தாற்காலிக அடிப் படையில் தேர்வு செய்யப் பட்டுள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறி வித்திருந்தது நினைவு கூரத் தக்கது.

Leave A Reply