வேலூர், மார்ச் 4 –
வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான மின் வெட்டை கண்டித்து விசைத் தறி நெசவாளர்கள் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
காங்கேய நல்லூரில் விசைத்தறி 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. 14 மணி நேரம் ஏற் படும் மின் வெட்டினால் இவர்கள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். இவர்கள் இத் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் காந்தி நகரிலுள்ள மின் வாரிய அலு வலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர் லீலாவதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசு 4 மணி நேர மின் வெட்டு என அறிவித் துள்ளது ஆனால் அறிவிக்கப்படாமல் 14 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. நாங்கள் தொழில் செய்ய முடியாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சாரதி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.