சென்னை, மார்ச் 4 –
தமிழ்நாட்டில் தங்கிப் படிக் கும் வெளிமாநில மாநில மாண வர்களின் விவரங்களை சேக ரிக்குமாறு கல்லூரிகளுக்கு தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை-கொள்ளை, வழிப்பறி சம் பவங்களில் தற்போது வட மாநில இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதாக போலீசார் விசா ரணையில் தெரியவந்துள்ள தாக கூறப்படுகிறது.இதனால் அவர்களை பற்றிய முழு விவரங்களையும் போலீசார் பட்டியல் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த 2 வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடு பட்ட 5 வட மாநில வாலிபர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
திருப்பூர் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் ஜார்க்கண்ட் மாநில கொள்ளை யர்கள் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.இதுமட்டுமின்றி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீவிர வாதிகள் தங்குவதற்கு சென் னை சேலையூர் பகுதியில் வாடகை வீட்டை அனுமதித் ததும் வடமாநில மாணவர்கள் தான் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.சென்னை புறநகர் பகுதி களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில இளைஞர் கள் நிறைய பேர் ஆங்காங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களில் பலர் கல்லூரி படிப்பை முடித் ததும் சொந்த ஊருக்கு செல் லாமல் இங்கேயே தங்கி விடு கின்றனர்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விட் டால் கமிஷன் கிடைக்கும் என்பதால் சிலர் அந்த பணி யில் ஈடுபடுகின்றனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற் படுகிறது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு வடமாநில மாணவர் கள் யார்-யார் ஹாஸ்டலுக்கு வெளியே தங்கி படிக்கிறார்கள் என்பதை பட்டியல் எடுத்து தருமாறு உயர்கல்வித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதுதொடர்பாக தலைமை செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புதுறை, பொதுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாண வர்கள் தொடர்பான தேவை யான விவரங்களை கல்லூரி களில் கேட்டுப் பெறவேண் டும் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: